முதல்வர் ஆதித்யநாத் நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் சென்ற மர்ம நபர்: உ.பி.யில் 7 போலீஸார் சஸ்பெண்ட்

By செய்திப்பிரிவு

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் அரங்கில் கடந்த வியாழக்கிழமை அரசு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்கவிருந்தார். இதனை முன்னிட்டு அந்த அரங்கை சுற்றியுள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், பல அடுக்கு சோதனைகளுக்கு பிறகே பார்வையாளர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நிகழ்ச்சி தொடங்குவதற்கு 45 நிமிடங் களுக்கு முன்பாக அரங்குக்குள் கடைசி கட்ட சோதனையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு நபர், கைத்துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். விசாரணையில், அவர் பஸ்தி பஞ்சாயத்து தலைவரின் உறவினர் ஜிதேந்திர பாண்டே என்பதும், அவர் வைத்திருந்த துப்பாக்கிக்கு உரிமம் பெற்றிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக 2 உதவி ஆய்வாளர் கள் உட்பட 7 போலீஸாரை பஸ்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் வஸ்தவா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

12 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்