குற்றவாளியை ஒரு முறை மட்டுமே பார்த்தவரை சாட்சியாக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

மதுபானத்தில் கலக்க பயன்படும் ஸ்பிரிட் போதைப் பொருளை கடத்தியதாக 2010-ம் ஆண்டு 4 பேரை கேரள போலீஸார் கைது செய்தனர். அவர்களை நேரில் பார்த்த நபர் ஒருவரையும், இந்த வழக்கில் சாட்சியாக போலீஸார் சேர்த்தனர். இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சியாக ஆஜரான நபர், குற்றம்சாட்டப்பட்டவர்களை 11 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததால் அவர்களை சரியாக அடையாளம் காண முடியவில்லை எனக் கூறினார். எனினும், குற்றம்சாட்டப்பட்டவர்களில் 2 பேரை ஓரளவுக்கு நினைவில் இருப்பதாக கூறி சாட்சி அளித்தார்.

வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:

ஒரு குற்ற வழக்கில் சாட்சியாக சேர்க்கப்படும் நபர், அந்தக் குற்றம் நடந்த சில நாட்களிலேயே போலீஸார் முன்பு குற்றவாளிகளை அடையாளம் காட்ட வேண்டும். ஆனால், இந்த வழக்கில் போலீஸார் இதனை செய்யவில்லை. அவர் 2 குற்றவாளிகளை அடையாளம் காட்டினார். அதிலும் அவர் உறுதியாக இல்லை. இதனால் அவரது சாட்சியம் நிராகரிக்கப்படுகிறது. குற்றம் நடந்த போது ஒரு முறை மட்டுமே குற்றவாளியை பார்த்த நபர், பல வருடங்களுக்கு பிறகு நீதிமன்றத்தில் நேரடியாக சாட்சியம் அளித்தால் அது வலுவான சாட்சியமாக இருக்காது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்