இந்தியாவின் முதல்முறை: ஐவிஎஃப் பண்ணி எருமை பிறந்தது

By செய்திப்பிரிவு

இந்தியாவின் முதல் ஐவிஎஃப் பண்ணி எருமை பிறந்தது

ஐவிஎஃப் கருத்தரிப்பு முறையின் மூலம் இந்தியாவின் முதல் பண்ணி (Banni) வகை எருமை பிறந்துள்ளது. இதன் மூலம், நாட்டின் கால்நடை செயற்கை இனப்பெருக்க தொழில்நுட்ப முறை அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளது.

குஜராத்தின் சோம்நாத் மாவட்டத்தில் இருக்கும் தனேஜில் அமைந்துள்ள சுசீலா ஆக்ரோ ஃபார்ம்ஸை சேர்ந்த வினய் எல் வாலா என்ற விவசாயியின் வீட்டில் இது நிகழ்ந்துள்ளது.

2020 டிசம்பர் 15 அன்று குஜராத்தில் உள்ள கட்ச் பகுதிக்கு பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, பண்ணி எருமை வகை குறித்து பேசியிருந்தார். அதற்கடுத்த நாளே, பண்ணி எருமைகளின் ஐவிஎஃப் கருத்தரித்தல் முயற்சிக்கு திட்டமிடப்பட்டது.

வினய் எல் வாலாவின் சுசீலா அக்ரோ ஃபார்ம்ஸை சேர்ந்த 3 பண்ணி எருமைகளை ஐவிஎஃப் கருத்தரித்தல் முயற்சிக்கு உட்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு முதல் எருமைக் கன்று தற்போது பிறந்துள்ளது.

எருமைகளின் செயற்கைக் கருத்தரிப்பு முறையில் மிகப்பெரிய சாத்தியக்கூறுகளை அரசு மற்றும் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். இதன் மூலம் கால்நடைகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கும் என மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்