ஆந்திராவில் தனது வருங்கால கணவருடன் செல்போனில் ‘வீடியோ கால்’ மூலம் பேசிக்கொண்டிருந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நிரோஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து செகந்திராபாத் போலீஸார் கூறியதாவது:
சித்தூர் மாவட்டத்தில் உள்ள மல்லேஷ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நிரோஷா (23). இவர் தெலுங்கு தொலைகாட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
செகந்திராபாத் சிந்தி காலனியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்த இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே நிரோஷா தனது வருங்கால கணவருடன் நேற்று முன்தினம் இரவு செல்போனில் ‘வீடியோ கால்’ மூலம் பேசி உள்ளார். அப்போது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து வருங்கால கணவர் நிரோஷாவின் பெற்றோருக்கும், அவர் தங்கியிருந்த விடுதிக்கும் உடனடியாக தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் விடுதி ஊழியர்கள் நிரோஷாவின் அறைக்கதவை தட்டியும் திறக்காததால், செகந்திராபாத் ராம்கோபால் பேட்டை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு செல்வதற்குள் நிரோஷா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, நேற்று காலையில் அவரது சடலத்தைக் கைப்பற்றி ஹைதராபாத் காந்தி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ராம்கோபால் பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, நிரோஷாவின் செல்போன் அழைப்புகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிரோஷா தற்கொலைக்கு வருங்கால கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
சென்னையில் தொலைக்காட்சி மற்றும் சில திரைப்படங்களில் நடித்த நடிகர் சாய் பிரசாந்த் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நிரோஷா தற்கொலை செய்துகொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago