உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மாணவிகளுக்கு ஸ்கூட்டியும், ஸ்மார்ட் போனும் இலவசம் எனக் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதன்மூலம், பெண் வாக்காளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா வத்ரா குறிவைத்து முன்னேற திட்டமிடுவதாகக் கருதப்படுகிறது.
இம்மாநிலத்தின் சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த வருடம் தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதற்கானப் பிரச்சாரத்தை காங்கிரஸின் தேர்தல் பொறுப்பாளர் பிரியங்கா தீவிரமாக நடத்தி வருகிறார்.
இதில், தமது கட்சியை உ.பி.,யில் மீண்டும் பலப்படுத்த பெண் வாக்காளர்களை பிரியங்கா குறிவைத்துள்ளார். இரண்டு தினங்களுக்கு முன் அவர் தம் கட்சியில் 40 சதவீதம் பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என அறிவித்திருந்தார்.
» புதுச்சேரியில் இறைச்சியில் விஷம் வைத்து 7 நாய்கள் கொலை: போலீஸார் விசாரணை
» குலுக்கலில் ஆடு, 4 கிராம் தங்கம் பரிசு: திருவாரூர் ஜவுளிக்கடைக்குக் குவியும் பாராட்டு
இந்தவகையில், மற்றொன்றாக பட்டதாரி மாணவிகளுக்கு ஸ்கூட்டியும், பிளஸ் டூ மாணவிகளுக்கு ஸ்மார்ட் போனும் இலவசமாக வழங்குவதாக இன்று அறிவித்துள்ளார். இது இதர அரசியல் கட்சிகளுக்கு உ.பி., தேர்தலில் பெரும் சவாலாகிவிட்டது.
இதேபோன்ற இலவசங்களின் அறிவிப்பை வெளியிட ஆளும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டு வருகின்றன. எனவே, இந்த முறை சட்டப்பேரவை தேர்தலால் உ.பி., வாசிகளுக்கு இலவசங்களின் பலன் கிடைக்க உள்ளன.
உ.பி.,யில் ஆண்களை விடப் பெண் வாக்காளர்கள் அதிகம். எனவே, இந்தத் தேர்தலில் பெண்களைக் குறிவைத்து செயல்படும் பிரியங்காவால் காங்கிரஸ் சற்று பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago