மோடியின் 7 ஆண்டுகள் ஆட்சியில் 35,000 தொழில்முனைவோர்கள் வெளியேறிவிட்டனர்: மே.வங்க நிதியமைச்சர் சாடல்

By செய்திப்பிரிவு

பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த 2014 முதல் 2020ம் ஆண்டுவரை நாட்டிலிருந்து 35 ஆயிரம் தொழில்முனைவோர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர் என்று மே.வங்க நிதிஅமைச்சர் அமித் மித்ரா சாடியுள்ளார்.

மேற்கு வங்க மாநில நிதிஅமைச்சர் அமித் மித்ரா ட்விட்டரில் பிரதமர் மோடியின் ஆட்சியை கடுமையாகச் சாடி, குற்றம்சாட்டியுள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது:

பிரதமர் மோடியின் ஆட்சியில் 35 ஆயிரம் இந்திய தொழில்முனைவோர்கள் 2014 முதல் 2000-ம் ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளிேயறிவிட்டனர். இவர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வர்த்தகம் செய்ய வந்தவர்களும் அடங்கும்.

அமித்மித்ரா

உலகிலேயே கூட்டமாக மக்களை வெளியேற்றுவதில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. ஏன் இந்த நிலை? அச்ச மனநிலையா. தன்னுடைய ஆட்சியில் எத்தனை தொழில்முனைவோர்கள் நாட்டை விட்டுச் சென்றார்கள் என்பதுகுறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மோர்கன் ஸ்டான்லி அறிக்கையில் கடந்த 2014முதல் 2018-ம் ஆண்டுவரை மட்டும் 23 ஆயிரம் தொழில்முனைவோர்கள் நாட்டைவிட்டு வெளியேறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது உலகிலேயே இங்குதான் மோசமாகும். 2019-ம் ஆண்டில் 7ஆயிரம் தொழில்முனைவோர்கள் வெளியேறியதாக ஆசிய ஆப்பிரிக்க வங்கி தெரிவிக்கிறது. 2020ம் ஆண்டில் 5 ஆயிரம் தொழில்முனைவோர் வெளியேறியதாக ஜிடபிள்யுஎம் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்திய வணிகத்துக்கு எதிராக பியூஷ் கோயலின் 19 நிமிட கோபமான பேச்சை நினைத்துப் பாருங்கள். இந்தியாவில் உள்ள வர்த்தக செயல்முறை அனைத்தும் தேசத்துக்கு விரோதமாக இருப்பதாகக் கூறிய கோயல், அதை தேசவிரோதம் என்று குறிப்பிட்டார். மனதில் பயத்தால் ஏற்படும் நோய், நாட்டிலிருந்து தொழில்முனைவோர்களை வெளியேறத் தூண்டுகிறது. ஆனால், பிரதமர் மோடி பியூஷ் கோயலை கண்டிக்கவில்லை. ஏன்”

இவ்வாறு மித்ரா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்