போதைப்பொருள் புகார் வழக்கு: ஷாருக்கான் வீட்டில் சோதனை: நடிகை அனன்யா பாண்டேவிடம் விசாரணை

By செய்திப்பிரிவு

சொகுசுக் கப்பலில் நடைபெற்றகேளிக்கை விருந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்த வழக்கில் ஆர்யா கான் கைதான நிலையில், இந்தி நடிகர் ஷாருக்கான் வீட்டிலும், இந்தி நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர்.

மும்பை கடற்பகுதியில் சொகுசுக் கப்பலில் நடைபெற்றகேளிக்கை விருந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக என்சிபிஅமைப்புக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கடந்த 3-ம் தேதி அந்தக் கப்பலில் என்சிபி அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 20 பேரை என்சிபி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆர்யன் கான் தற்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஆர்யன் கான் உள்ளிட்டோர் மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த் மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ஆர்யன் கானை முதல்முறையாக அவரின் தந்தை ஷாருக் கான் இன்று நேரடியாகச் சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில் மன்னத் பகுதியில் உள்ள நடிகர் ஷாருக்கான் வீட்டிலும், இந்தி நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே ஷாருக்கானின் மகனுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்திருந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஷாருகானின் வீட்டில் ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா என சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபோலவே இந்தி நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும் சோதனை நடந்தது.

போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் வாட்ஸ்அப் விவாதத்தில் அனன்யா பாண்டே பெயர் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
அனன்யா பாண்டே, 22, 2019 இல் திரைப்படங்களில் அறிமுகமானார். இவர் நடிகர் சங்கி பாண்டே மற்றும் பாவனா பாண்டே ஆகியோரின் மகள் ஆவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்