இந்தியாவில் புதிதாக மேலும் 14,623 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 197 பேர் உயிரிழந்தனர். இது நேற்றைய தொற்று எண்ணிக்கையை விட சற்றே அதிகமாகும்.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 14,623. இதில் கேரளாவில் மட்டும் 7,643 பேருக்கு தொற்று உறுதியானது.
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,41,08,996.
» உத்தரகாண்ட் மழை வெள்ளத்தில் சிக்கி 34 பேர் பலி: ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர்
இதுவரை குணமடைந்தோர்: 3,34,78,247.
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 19,446.
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 197. இதில் கேரளாவில் 77 பேர் உயிரிழப்பு.
கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,52,651.
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,78,098. இது கடந்த 229 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைவு.
இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 99,12,82,283 கோடி கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 41,36,142 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 98.15% ஆக உள்ளது. சிகிச்சையில் இருப்போர் விகிதமும் 0.52% ஆக உள்ளது. இது கடந்த மார்ச் 2020க்குப் பின்னர் மிகக் குறைவான விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
வாராந்திர பாசிடிவிட்டி ரேட் 1.34% ஆக உள்ளது. கடந்த 117 நாட்களாகவே பாசிடிவிட்டி ரேட் 3% க்கும் கீழ் உள்ளது.
பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதன் அளவீடு.
தினசரி பாசிடிவிட்டி ரேட் 1.10% ஆக உள்ளது. இதுவும் கடந்த 51 நாட்களாக 50%க்கும் கீழ் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago