கரோனா தொற்று முற்றிலும் குறைந்தால்தான் மாற்றுத்திறனாளிகள் முதியோருக்கு சிறப்பு தரிசனம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

By என்.மகேஷ்குமார்

கரோனா பரவலால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20-ம் தேதி முதல், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர்களுக்கான சிறப்பு தரிசன முறையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்தது.

தற்போது, விஐபி பிரேக் தரிசனங்கள், வாணி அறக்கட்டளை தரிசனம், ரூ.300 சிறப்பு ஆன்லைன்தரிசனம் மற்றும் ஆன்லைனில் இலவச தரிசனம் என தினமும் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின் றனர். முன்பதிவு செய்யாமல் வரும்பக்தர்கள் அலிபிரி சோதனைச் சாவடி அருகே சோதனைக்கு பிறகுதிருப்பி அனுப்பி விடுகின்றனர்.

இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள், முதியோர் மற்றும் கைக்குழந்தையுடன் வந்தால் சுவாமியை தரிசிக்கலாம் என சமூக வலைத்தளங்களில் சிலர் வதந்தியை கிளப்பி விட்டனர். இதுகுறித்து நேற்று திருப்பதி தேவஸ்தானம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை பக்தர்கள் நம்ப வேண்டாம்என்றும், கரோனா குறைந்தால்தான், மீண்டும் மேற்கூறிய சிறப்பு தரிசன முறை அமல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

பவுர்ணமி கருட சேவை

இன்று (20-ம் தேதி) திருமலையில் பவுர்ணமி கருட சேவை நடைபெறும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்றிரவு 7 - 9 மணி வரை, மாடவீதிகளில் கருட வாகனத்தில் மலையப்பரின் வீதி உலாநடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

51 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்