கோவிட்-19 தடுப்பூசி இரண்டாம் டோஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கோவிட்-19 தடுப்பூசி இரண்டாம் டோஸ்க்காக காத்திருக்கும் மக்களுக்கு வழங்குவதற்கு போதுமான அளவு வழங்க மாநிலங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசி வழங்கலின் முன்னேற்றம் குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதாரச் செயலாளர்கள் மற்றும் தேசிய சுகாதார இயக்க நிர்வாக இயக்குநர்களுடன் மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் காணொலி மூலம் ஆய்வு செய்தார்.

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் 2021 ஜனவரி 16 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. 100 கோடி டோஸ்களை நாடு நெருங்கி வருகிறது என்று குறிப்பிட்ட சுகாதாரச் செயலாளர், அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகளை வழங்குவதற்கான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

தகுதியுள்ள பயனாளிகளில் குறிப்பிடத்தக்க அளவினர் அவர்களது இரண்டாம் டோசை இன்னும் பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அவர்களை சென்றடைவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.

இரண்டாம் டோஸ்க்காக காத்திருக்கும் மக்களுக்கு வழங்குவதற்கு போதுமான அளவு தடுப்பூசிகள் பல மாநிலங்களின் கையிருப்பில் இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டது. மேற்கண்ட பணியை நிறைவு செய்வதற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்குவதற்கு இந்திய அரசு தயாராக உள்ளது. தடுப்புமருந்து வழங்கலின் வேகத்தையும் அளவையும் அதிகரிக்குமாறு மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டன.

தடுப்பூசிப் பெற்றுள்ள, மக்கள் குறைந்த அளவு உள்ள மாவட்டங்களை அடையாளம் கொண்டு அவற்றுக்கு முன்னுரிமை அளிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. உள்ளூர் சவால்களை எதிர்கொண்டு தடுப்புமருந்து வழங்கல் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டன. இரண்டாம் டோஸ் வழங்கலை மேம்படுத்துவதற்கான திட்டங்களை பகிர்ந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்