புத்தரின் யாத்திரைத் தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு

By செய்திப்பிரிவு

குஷிநகர் சர்வதேச விமானநிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்க உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் ரூ.260 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. புத்தபிரான் மகாபரிநிர்வானா அடைந்த இடத்தைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச யாத்ரீகர்களுக்கு வசதியாக இது அமைவதுடன், உலகெங்கும் உள்ள புத்தரின் யாத்திரைத் தலங்களை இணைக்கும் வகையிலும் செயல்படும்.

இந்த விமான நிலையம் அதன் அருகில் உத்தரப்பிரதேசம் மற்றும் பிஹாருக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கும் பெரிதும் பயன்படுவதுடன், அப்பகுதியில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதையும் ஊக்குவிக்கும். குஷிநகர் சர்வதேச விமானநிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்க உள்ளார்.

குஷிநகர் சர்வதேச விமான நிலையத் திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில், இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்திலிருந்து வரும் விமானம் முதலில் தரையிறங்குகிறது. இந்த விமானத்தில் இலங்கையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட புத்த துறவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழுவினர் வருகை தர உள்ளனர்.

இதில் புத்தமதக் கொள்கைகளைப் பரப்பும் 12 பேர் இடம் பெற்றிருப்பதுடன், புத்தரின் புனித நூல்களையும், குஷிநகரில் காட்சிப்படுத்துவற்காக எடுத்து வருகின்றனர். இந்த பிரதிநிதிகள் குழுவில், இலங்கை புத்த மதத்தின் நான்கு பிரிவுகளான அஸ்கிரியா, ஆமராபுரா, ராமன்யா, மால்வட்டா ஆகிய நிகாதாக்களைச் சேர்ந்த அணுநாயகர்கள் (துணைத்தலைவர்கள்) மற்றும் இலங்கை அரசின் கேபினட் அமைச்சர் நமல் ராஜபக்சே தலைமையில் ஐந்து அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நாளை காலை 11.30 மணி அளவில் அபிதாம்மா தினத்தையொட்டி மகாபரிநிர்வானா கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார். அதன் பின், சுமார் குஷிநகரில் நடைபெறும் விழாவில் பங்கேற்று, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

அஜந்தா ஓவியங்களின் கண்காட்சியை பார்வையிடும் பிரதமர், குஜராத்தின் வத்நகர் மற்றும் பிற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட புத்த கைவினைப் பொருட்கள், புத்த சூத்திரங்களின் கையெழுத்துப் பிரதியையும் பார்வையிட உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்