வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு விலை கடந்த ஆண்டை விட குறைவு தான்: மத்திய அரசு விளக்கம்

By செய்திப்பிரிவு

வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு விலை கடந்தாண்டை விட குறைவு தான் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

வெங்காயம், தக்காளி, மற்றும் உருளைக்கிழங்கு விலைகள் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு குறைவாகவே விற்கப்படுகிறது.

டெல்லியில் வெங்காயம் விலை கடந்த 14ம் தேதி அன்று கிலோ ரூ.44 ஆக இருந்தது. மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் முறையே ரூ.45, 57, 41 என இருந்தது. அகில இந்திய அளவில் வெங்காயத்தின் சில்லரை விற்பனை விலை ரூ.37.06. அகில இந்திய அளவில் அதன் மொத்த விலை குவிண்டால் ரூ.3002.25.

கடந்த அக்டோபர் 12ம் தேதி வரை, நாட்டின் முக்கிய சந்தைகளில் 67,357 மெட்ரிக் டன் வெங்காயங்கள் வழங்கப்பட்டன. இது தவிர நுகர்வோர் விவகாரத்துறை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எடுத்துச் செல்ல கிலோ ரூ.21க்கு வெங்காயங்களை வழங்கியது.

விலை நிலைப்படுத்துதல் நிதியின் கீழ், வெங்காய கிடங்கை நுகர்வோர் விவகாரத்துறை பராமரிக்கிறது. 2021-22ம் ஆண்டில் 2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை 2.08 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது.

இதேபோல் உருளைக்கிழங்கின் விலையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் தற்போது உருளைக்கிழங்கு விலை கடந்த 14ம் தேதி கிலோ ரூ.27 ஆக இருந்தது. கடந்தாண்டு இதே தேதியில் இது கிலோ ரூ.40 ஆக இருந்தது. வெங்காயம் விலை தற்போது ரூ.42 ஆக உள்ளது. கடந்தாண்டில் இது ரூ.50 ஆக இருந்தது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்