காங்கிரஸுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்த நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
பெங்களூருவை சேர்ந்த 'டிசைன்பாக்ஸ்டு' நிறுவனம், அசாம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸுக்காக தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தது. டிஜிட்டல் தளங்களில் தேர்தல் பிரச்சாரங்களை மேற் கொண்டது. இதேபோல சூரத், சண்டிகர் நிறுவனங்களும் காங்கிர ஸுக்காக தேர்தல் உத்திகளை வகுத்து கொடுத்தன.
இந்த பின்னணியில் பெங்களூரு வில் உள்ள டிசைன்பாக்ஸ்டு நிறுவன அலுவலகம் மற்றும் சூரத், சண்டிகர், மொகாலி உட்பட 7 நகரங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.7 கோடி முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் ரூ.70 கோடி அளவுக்கு போலி செலவு கணக்குகள் காட்டப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வருமான வரித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹவாலா பணப் பரிமாற்றத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நிறுவன இயக்குநர்கள், அவர்களின் குடும்பத்தினர் பயன்படுத்தி வரும் கார்கள், ஊழியர்களின் பெயர்களில் வாங்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் விளக்கம்
இதுதொடர்பாக டிசைன் பாக்ஸ்டு இணை நிறுவனர் நரேஷ் அரோரா கூறும்போது, "நாங்கள் சட்டத்தை மதித்து நடக்கிறோம். முறையாக வருமான வரி செலுத்துகிறோம். ஆனால் அரசியல் உள்நோக்கத்துடன் எங்கள் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்காக பணி யாற்றுவதால் எங்கள் மீது பழி வாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் வட்டாரங் கள் கூறும்போது, "கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று பாஜக அஞ்சு கிறது. அரசியல்ரீதியாக எங்க ளோடு மோத முடியாததால் குறுக்கு வழிகளை பாஜக முயற்சி செய்கிறது" என்று குற்றம் சாட்டின.
ரொக்கம், தங்க நகைகள்
திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்திலும் வருமான வரித் துறை சோதனை நடத்தியுள்ளது. அப்போது கணக்கில் காட்டப் படாத ரூ.1.95 கோடி ரொக்க பணமும் ரூ.65 லட்சம் மதிப் புள்ள தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிறுவனம் தொடர்பான விசாரணையை வருமான வரித் துறை தீவிரப் படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago