மழை வெள்ளத்தால் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர்உயிரிழந்துள்ள நிலையில் 22 பேர் மண்ணில் புதைந்துள்ளதாக தெரிகிறது. மீட்பு பணிகளில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
இந்தநிலையில் பிரதமர் மோடி கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது மாநிலத்தில் கனமழை, நிலச்சரிவு பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தேன்.
கேரளாவில் பெய்து வரும் கனமழை, நிலச்சரிவால் பலர் உயிரிழந்த நிகழ்வு வேதனை அளிக்கிறது.
» இ-ஷ்ரம் இணையளத்தில் 4 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு: ரூ.2.0 லட்சம் இழப்பீடு பெறலாம்
» ‘‘பஞ்சாப் மீண்டெழ கடைசி வாய்ப்பு….’’- சோனியா காந்திக்கு சித்து பரபரப்பு கடிதம்
காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ களத்தில் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். அனைவரும் பாதுகாப்புடன் இருக்கவும் மற்றும் நலமுடன் இருக்கவும் நான் பிரார்த்திக்கிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
44 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago