ஹைதராபாத்தில் ஒரு கப் டீ ரூ.1,000

By என்.மகேஷ்குமார்

நட்சத்திர ஓட்டல்களில் காபி, டீ போன்றவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால் ஹைதராபாத்தில் நடுத்தர ஓட்டல் ஒன்றில் ஒரு கப் டீ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் ஈரானி டீ, சைனீஸ் டீ என விதவிதமான டீவிற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள நீலோஃபர் டீக்கடை மிகவும்பிரபலாமானது. பல கிளைகள் கொண்ட இந்தக் கடையில் விதவிதமான டீ, பிஸ்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவர்கள் சமீபத்தில், பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் தங்கள் கிளையை திறந்தனர். இங்கு ஒரு கப் டீ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் அப்படி என்னதான் இருக்கிறது என ருசித்துப் பார்ப்பதற்காகவே சிலர் ரூ.1,000 கொடுத்து அங்கு டீ குடித்து விட்டுச் செல்கின்றனர்.

இதுகுறித்து ஓட்டலின் உரிமையாளர் கூறும்போது, “அசாமில் ‘கோல்டன் டிப்ஸ் பிளாக் டீ’ எனும்டீ தூள் ஏலம் விடப்பட்டது. இதனைஒருகிலோ ரூ.75 ஆயிரத்துக்கு நாங்கள் ஏலத்தில் எடுத்தோம். மிகவும் அரிதான, உயர்வகை டீ தூள் இது. இதனால் இந்த தூள் கொண்ட ஒருகப் டீயை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இதனை ருசித்தவர்கள் மிகவும் நன்றாக இருப்பதாக கூறுகின்றனர்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்