இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்தக் கோவிட்-19 தடுப்பூசிகள் எண்ணிக்கை 97.14 கோடியைக் கடந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 30,26,483 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 97.14 கோடியைக் (97,14,38,553) கடந்தது. 95,66,873 அமர்வுகள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 19,391 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,33,82,100 ஆக அதிகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.07 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இதுவே அதிகமான அளவு.
மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து 110 நாட்களாக 50,000க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,862 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 2,03,678; 216 நாட்களில் இது மிகக் குறைந்த எண்ணிக்கை. நாட்டில் மொத்தம் கோவிட் சிகிச்சைப் பெறுபவர்களின் விகிதம் தற்போது 0.60 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 11,08,148 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 58.88 கோடி கோவிட் பரிசோதனைகள் (58,88,44,673) செய்யப்பட்டுள்ளன.
வாராந்திரத் தொற்று உறுதி கடந்த 112 நாட்களாக 3 சதவீதத்திற்கும் கீழே நீடித்து, தற்போது 1.42 சதவீதமாகவும், தினசரித் தொற்று உறுதி தற்போது விகிதம் 1.43 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 129 நாட்களாக 5 சதவீதத்திற்குக் கீழேயும் 46 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago