குழந்தைகள் இஷ்டத்துக்கு பார்க்கிறார்கள்; ஓடிடி தளத்தில் கட்டுப்பாடு தேவை: மோகன் பாகவத் அறிவுறுத்தல்

By ஏஎன்ஐ

ஓடிடி தளத்தின் மூலம் திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் பார்ப்பதில் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் இருக்கிறது, குழந்தைகளும் கட்டுப்பாடற்ற வகையில் பார்க்கிறார்கள், இதை உடனடியாக வரைமுறைக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார்.

நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகத்தில் அந்த அமைப்பின் 96-வது ஆண்டு விழா மற்றும் விஜயதசமி பண்டிகைக் கொண்டாட்டம் இன்று நடந்தது. ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அணிவகுப்பைப் பார்வையிட்ட தலைவர் மோகன் பாகவத்,கொடிஏற்றி, சாஸ்திர பூஜைகள் செய்தார். அதன்பின் நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:

கரோனா காலத்தில் குழந்தைகளுக்கு ஆன்-லைன் வகுப்புகளுக்காக ஸ்மார்ட்போன்கள் வழியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், அதிலும் குழந்தைகள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதில் கட்டுபாடற்ற சூழல் நிலவுகிறது.

குறிப்பாக ஓடிடி தளத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாததால், ஒவ்வொருவரும் பொறுப்பற்ற வகையில் அதை பார்க்க முடிகிறது. குழந்தைகள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள்தான் அவர்களை நிர்வகிக்கிறது.

விவேகம் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு இல்லாத நிலையில், எந்த வழியில் மற்றும் எந்த அளவிற்கு வளர்ந்து வரும் நியாயமான மற்றும் நியாயமற்ற தொடர்பு நம் சமுதாயத்தை ஆட்டிப்படைக்கும் என்று கணிப்பது கடினம். இந்த விஷயங்களை தேசவிரோத சக்திகள் எந்த அளவுக்குச் சென்று பயன்படுத்துவார்கள் என்பதும் நமக்குத் தெரிந்ததே. ஆதலால், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதை ஒழுங்குபடுத்த வேண்டும்.

இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்