ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ரூ.5 கோடி பணத்தை பயன்படுத்தி அம்மனையும் கோயிலையும் அலங்கரித்து பிரம்மிக்க வைத்தனர்.
தசரா பண்டிகை ஆந்திராவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் கடந்த 7-ம் தேதி முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, விஜயவாடா கனகதுர்க்கையம்மன் கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில்,ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனா கோயில் உள்ளிட்ட முக்கிய ஆலயங்களில் மாலையில் அம்மனுக்கு விதவிதமான அலங்காரங்கள் செய்யப் படுகின்றன.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நேற்று ரூ.5 கோடிக்கு புத்தம் புதிய நோட்டுகளைப் பயன்படுத்தி அம்மனையும், சந்நிதி உள்ளிட்ட பிற இடங்களையும் அலங்கரித்தனர்.
ரூபாய் நோட்டுகளால் தோரணம்
வாயிற்படி முதல் கர்ப்பக்கிரகம் வரை 500, 200, 100, 50, 20 ரூபாய்நோட்டுகளால் தோரணங்கள், அலங்கார வளைவுகள், மாலைகளும் செய்திருந்தனர். மேலும்தங்க பிஸ்கெட்களும் வைத்திருந்தனர். இதனால் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில்நிர்வாகிகள் செய்திருந்தனர். பக்தர்களை குறைந்த எண்ணிக்கையிலேயே தரிசனத்துக்கு அனுமதித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago