முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு உடல்நலக் குறைவு: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காய்ச்சல் மற்றும் உடல் பலவீனம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று முதலே காய்ச்சல் இருந்துள்ளது. இப்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு தேவையான சிகிச்சைகள் முறையாக அளிக்கப்பட்டு வருகின்றன என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மன்மோகன் சிங்குக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அதிலிருந்து அவர் மீண்டார்.

தற்போது மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதித்துள்ளது. அவர் நலம் பெற தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

89 வயதான மன்மோகன் சிங், 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்தார்.

அதற்கு முன்னதாக நரசிம்ம ராவ் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவிவகித்தார். இவர் நிதி அமைச்சராக இருந்த 1991 ஆம் ஆண்டில் தான், தாராளயமாக்கல் எனும் பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்