குறித்த நேரத்தில் மட்டுமல்லாமல் குறித்த நேரத்திற்கு முன்பாக திட்டங்களை முடிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என பிரதமர் மோடி கூறினார்.
பிரதமரின் அதிவிரைவுத் திட்டம் பன்முனை இணைப்புக்கான தேசிய பெருந்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பிரகதி மைதானத்தில் புதிய கண்காட்சி வளாகத்தையும் அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
இன்று சக்தியை வழிபடும் அஷ்டமி நாள். இந்த மங்களகரமான தருணத்தில், நாட்டின் முன்னேற்றத்தின் வேகமும் புதிய சக்தியைப் பெறுகிறது. தற்சார்பு இந்தியா தீர்மானத்துடன் அடுத்த 25 ஆண்டுகளுக்கான இந்தியாவின் அடித்தளம் இன்று அமைக்கப்படுகிறது. பிரதமரின் அதிவிரைவு தேசிய பெருந்திட்டம், தற்சார்பு இந்தியா வாக்குறுதிக்கான இந்தியாவின் நம்பிக்கையை பெறும்.
இந்தப் பெருந்திட்டம் 21ஆம் இந்தியாவின் நூற்றாண்டுக்கு அதிவிரைவு சக்தியை அளிக்கும். இந்திய மக்கள், இந்திய தொழில்துறை, இந்திய வர்த்தகம், இந்திய உற்பத்தியாளர்கள், இந்திய விவசாயிகள் ஆகியோர் இந்த அதிவிரைவு சக்தி பிரச்சாரத்தின் மையமாக உள்ளனர். 21ம் நூற்றாண்டு இந்தியாவை உருவாக்க இந்த அதிவிரைவு சக்தித் திட்டம் தற்போதைய, எதிர்கால தலைமுறைக்கு புதிய சக்தியை அளிக்கும் மற்றும் அவர்களின் பாதையில் உள்ள தடைகளை அகற்றும்.
» ஆர்யன் கான் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
» இ-வே பில் மூலம் ரூ.134 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி: டெல்லியில் ஒருவர் கைது
முன்னேற்றத்திற்கு வேகம், ஆர்வம், மற்றும் ஒட்டுமொத்த முயற்சிகள் தேவை. இன்றைய 21ம் நூற்றாண்டு இந்தியா பழைய நடைமுறைகளை பின்னுக்கு தள்ளுகிறது. குறித்த நேரத்தில் திட்டங்களை நிறைவேற்றும் பணிக் கலாச்சாரத்தை மட்டும் நாங்கள் உருவாக்கவில்லை, குறித்த நேரத்திற்கு முன்பாக திட்டங்களை முடிக்கும் முயற்சிகளும் நடக்கின்றன.
நம் நாட்டில் உள்கட்டமைப்பு விஷயத்திற்கு பல அரசியல் கட்சிகள் முன்னுரிமை அளிப்பதில்லை . அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் கூட இது காணப்படுவதில்லை. நாட்டின் அவசிய உள்கட்டமைப்புகளை சில அரசியல் கட்சிகள், விமர்சிக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது.
நீடித்த வளர்ச்சிக்கு தரமான உள்கட்டமைப்பு உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பல பொருளாதார நடவடிக்கைகளுக்கு இது ஊக்கத்தை அளிக்கிறது மற்றும் மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்குகிறது.
பெரிய திட்டம் மற்றும் சிறிய அமலாக்கத்திற்கு இடையே உள்ள இடைவெளி காரணமாக ஒருங்கிணைப்புக் குறைபாடு, மேம்பட்ட தகவல், சிந்தனை குறைபாடு மற்றும் மந்த கதியிலான வேலை போன்ற பிரச்சினைகள் கட்டுமானங்களுக்கு தடைகளை ஏற்படுத்துகின்றன. சக்தி அதிகரிப்பதற்குப் பதிலாக பிரிக்கப்படுகிறது . இப்பிரச்சினைக்கு பிரதமரின் அதிவிரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் தீர்வு காணும்.
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்ற போது கிடப்பிலிருந்த நூற்றுக்கணக்கானத் திட்டங்களை ஆய்வு செய்தோம். ஒருங்கிணைப்பு இல்லாததால் ஏற்படும் தாமதங்களை தவிர்ப்பதில் தற்போது கவனம் செலுத்தப்படுகிறது. முழு அரசு அணுகுமுறையுடன் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அரசின் ஒட்டுமொத்த சக்தியும் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதன் காரணமாக பல தசாப்தங்களாக நிறைவேற்றப்படாத திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
பிரதமரின் அதிவிரைவு சக்தி பெருந்திட்டம், அரசின் நடைமுறைகளை பலதரப்பினருடன் ஒருங்கிணைப்பதோடு மட்டுமல்லாமல் பலவகையான போக்குவரத்தையும் ஒருங்கிணைக்க உதவுகிறது.
மாநிலங்களுக்கு இடையேயான இயற்கை எரிவாயு குழாய் திட்டம் கடந்த 1987ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பின்பு 2014ம் ஆண்டு வரை 27 ஆண்டுகளாக 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயற்கை எரிவாயு குழாய் அமைக்கப்பட்டது. தற்போது 16 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு குழாய் அமைக்கும் பணி நாடு முழுவதும் நடைபெறுகிறது, இந்தப் பணி அடுத்தஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டுக்கு முந்தைய ஐந்தாண்டுகளில் ஆயிரத்து தொள்ளாயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே ரயில்பாதைகள் இரட்டிப்பாக்கும் பணி நடைபெற்றன. கடந்த ஏழு ஆண்டுகளில் 9 ஆயிரம் கிலோமீட்டருக்கு அதிகமான தூரத்திற்கு ரயில் பாதைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன.
2014ஆம் ஆண்டுக்கு முந்தைய ஐந்தாண்டுகளில் மூவாயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே ரயில்பாதைகள் மின்மயமாக்கப்பட்டன. கடந்த ஏழு ஆண்டுகளில் 24 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிகமான ரயில்பாதைகள் மின்மயமாக்கப்பட்டன. 2014ஆம் ஆண்டுக்கு முன்பாக சுமார் 250 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. இன்று மெட்ரோ ரயில் 700 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய மெட்ரோ வழித்தடப் பணி நடைபெறுகிறது. 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய ஐந்தாண்டுகளில் 60 பஞ்சாயத்துக்களில் மட்டுமே கண்ணாடி இழை கேபிள் இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த ஏழாண்டுகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துக்களை கண்ணாடி இழை கேபிளுடன் இணைத்துள்ளோம் .
நாட்டில் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வருமானத்தை அதிகரிக்க பதப்படுத்தும் தொழில் தொடர்பான உள்கட்டமைப்புகளும் விரைவாக விரிவுப்படுத்தப்படுகின்றன. 2014ம் ஆண்டில் நாட்டில் இரண்டு மிகப் பெரிய உணவுப் பூங்காக்கள் மட்டுமே இருந்தன. இன்று 19 மிகப் பெரிய உணவுப் பூங்காக்கள் செயல்படுகின்றன.
தற்போது இதை 40-க்கும் மேற்பட்டதாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் ஐந்து நீர்வழிப் போக்குவரத்து மட்டுமே இருந்தன. இன்று இந்தியாவில் 15 நீர்வழிப் போக்குவரத்துகள் செயல்படுகின்றன. கடந்த 2014ஆம் ஆண்டில் துறைமுகங்களில் கப்பல் வந்து செல்லும் நேரம் 41 மணி நேரத்திலிருந்து 27 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே மின் தொகுப்பு என்ற வாக்குறுதியை நாடு உணர்ந்துள்ளது. இந்தியாவில் தற்போது 4.25 லட்சம் சுற்று கிலோமீட்டர் மின்பகிர்மான வழித்தடங்கள் உள்ளன. கடந்த 2014ம் ஆண்டில்இது 3 லட்சம் சுற்று கிலோமீட்டராக இருந்தது.
தரமான உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் வர்த்தகத் தலைநகராக மாறும் கனவை இந்தியா அடையும். நமது இலக்குகள் அசாதாரணமானவை , இதற்கு அசாதாரணமான முயற்சிகள் தேவை. இந்த இலக்குகளை அடைய பிரதமரின் அதிவிரைவு சக்தித் திட்டம் மிக உதவிகரமாக இருக்கும். அரசின் உதவிகளைப் பெறுவதில் தன்ஜன், ஆதார் , செல்போன் ஆகிய மூன்றும் புரட்சியை ஏற்படுத்தியது போல் பிரதமரின் அதிவிரைவு சக்தி திட்டமும் உள்கட்டமைப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும்
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago