*
மேற்குவங்க தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதையடுத்து பதுங்கியிருந்த மாவோயிஸ்டு கள் பலர் மீண்டும் வெளியில் தலைகாட்டத் தொடங்கியுள்ளனர். ஆங்காங்கே வன்முறைகள் வெடிக்கின்றன.
சில தினங்களுக்கு முன்பு தெற்கு 24 பாரக்னாஸ் மாவட்டத்தில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பிய திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் ஹாஜி அப்துல் ஜெஹல் முல்லா (75) என்பவர் மீது சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குண்டுவீசியவர்கள் நாட்டுத் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டபடி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள்தான் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளனர் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதுபோன்று பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. அரசியல்ரீதியான கொலை களுக்கு திரிணமூல் காங்கிரஸ்தான் காரணம் என்று இடதுசாரிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து திரிணமூல் முக்கிய நிர்வாகி முகுல் ராய், ‘தி இந்து’விடம் பேசியபோது, ‘தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இதுவரை திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் 8 பேர் கொல்லப்பட்டுள் ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணை யத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். இதற்கு மேல் ஒரு கொலை நடந்தாலும் சடலத்தை தேர்தல் ஆணையம் முன்பாக வைத்து போராட்டம் நடத்துவோம்’ என்று தெரிவித்தார்.
தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ‘சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே, சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசின் கடமை. இதுகுறித்து உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்’ என்று பதிலளித்தார்.
ஆனால் முகுல் ராயிடம் கேட்ட போது, ‘தேர்தல் ஆணையம் இதுவரை 6 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றியுள் ளது. 44 மாநில அரசு உயர் அதிகாரிகளை மாற்றியுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட வுடன் அதிகாரிகள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கு சென்று விடுகின்றனர். எனவே, அரசியல்ரீதியான வன்முறைகளை தடுப்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்புதான்’ என்று கூறினார்.
வெடிகுண்டுகள் பறிமுதல்
இப்படி தேர்தல் ஆணையமும் ஆளுங் கட்சியும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வரும் நிலையில், முர்ஷிதாபாத், பீர்பம் மாவட்டங்களில் இதுவரை நடந்த சோதனைகளில் 321 கிலோ நாட்டு வெடி குண்டுகள், 2099 நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் சமூக விரோதிகள் வன்முறையில் ஈடு படாமல் இருக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
500 கம்பெனி துணை ராணுவ படை
வன்முறை சம்பவங்கள் நடக்காமல் தடுக்க 500 கம்பெனி துணை ராணுவப் படை மேற்குவங்கம் வந்துள்ளது. மாவோயிஸ்டுகள் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ளதால் அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் துணை ராணுவப் படையினர் அதிக அளவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேற்குவங்கத்தில் கள்ளத் துப்பாக்கி கள், நாட்டு வெடிகுண்டுகள் நேரடியாக விற்கப்படுவதில்லை. பலகட்ட புரோக்கர் களை தாண்டிச் சென்றுதான் வாங்க முடியும். இந்த வியாபாரத்தில் ஈடுபட் டுள்ள இடைத்தரகர் ஒருவரை தொடர்பு கொண்டபோது, பெயர் தெரிவிக்க மறுத்து பேசினார்.
அவர் கூறியபோது, ‘முன்பு பிஹார், உத்தரப் பிரதேசத்தில் இருந்து கள்ளத் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கள் வரவழைக்கப்பட்டன. இப்போது அங்கிருந்து ஆட்களை கூட்டி வந்து இங்கேயே தயாரிக்கிறார்கள். ஹவுரா, மால்டா, முர்ஷிதாபாத், வடக்கு மற்றும் தெற்கு 24 பாரக்னாஸ் மாவட்டங்களில் தயாரிக்கிறார்கள். வெடிகுண்டு தயாரிப் பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10,000 சம்பளம் தருகிறார்கள். நாட்டுத் துப்பாக்கி கள் ரக வாரியாக ரூ.20,000 முதல் ரூ.60,000 வரை கிடைக்கிறது. 5 எம்எம், 7 எம்எம், 9 எம்எம் துப்பாக்கிகள் விற்பனைக்கு உள்ளன. இவற்றை ஒருமுறை மட்டுமே சுட முடியும். மீண்டும் தோட்டா போட்டபின் மறுபடியும் சுட வேண்டும். 20 துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பெட்டி ரூ.400 முதல் ரூ.1,000 வரை கிடைக்கிறது. போலீ ஸார் அவ்வப்போது சோதனை நடத்துவ தால் நேரடியாக விற்பனைக்கு கிடைக் காது. பல புரோக்கர்களை தாண்டிச் சென்றுதான் நாட்டு வெடிகுண்டு, துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வாங்க முடியும்’ என்றார்.
புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் முரண்பாடு ஏற்பட்டதால் மேற்குவங்கத் தில் கடந்த 97-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்சி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகர அமைப்பான சிபிஆர்எம். இக்கட்சி முதன்முறையாக மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் களம் இறங்குகிறது. டார்ஜிலிங் தொகு திக்கு கோவிந்த் சேத்ரி, குர்ஷியாங் தொகுதிக்கு அருண் கடானி, கலிம்போங் தொகுதிக்கு கிஷோர் பிரதான் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த திடீர் முடிவு குறித்து முன்னாள் எம்பி-யும் சிபிஆர்எம் கட்சியின் தலைவரு மான ஆர்.பி.ராயிடம் கேட்டபோது, ‘இது வரை நாங்கள் தனியாக வேட்பாளர்களை நிறுத்தியதில்லை. மற்ற கட்சிகளுடன் இணைந்துதான் தேர்தலைச் சந்தித்து வந்துள்ளோம். தோட்ட தொழிலாளர் களுக்கு நிலப்பட்டா மற்றும் கூர்க்கா லாந்து மாநிலம் ஆகிய இரண்டும்தான் எங்கள் பிரதான கோரிக்கை. எந்த அரசியல் கட்சியும் இந்த கோரிக்கைகளை கவனிப்பதாக தெரியவில்லை. அதனால், நாங்களே தேர்தலில் நேரடியாக போட்டி யிடுவது என்று முடிவெடுத்துவிட்டோம்.
கூர்க்காலாந்து தனி மாநில கோரிக் கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை ஏற்க மறுத்தது. அதனால்தான் நாங்கள் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டி வந்தது. அப்போது முதல் தனிமாநில பிரச்சினை பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேசுவதே இல்லை. எங்கள் அடை யாளத்தை நிலைநிறுத்துவது எங்களுக்கு முக்கியம். எங்கள் கோரிக்கை நிறைவேறுகிறதோ இல்லையோ, அந்த இலக்கை நோக்கி நாங்கள் எல்லா வகையிலும் முயற்சி எடுத்துக் கொண்டே இருப்போம்’ என்றார்.
மம்தாவுக்கே வாய்ப்பு
தேர்தல் நிலவரம் குறித்து கொல்கத்தாவைச் சேர்ந்த போக்குவரத்து காவலர் முகமது இர்பான் அலி கூறியபோது, ‘தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளது. கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் சில தொகுதிகளில் பலத்துடன் உள்ளனர். அவர்களும் கடந்த முறையைவிட கூடுதல் இடங்களைப் பெற வாய்ப்புள்ளது. கடந்த ஆட்சியில் இருந்ததைவிட வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளன. மம்தா பானர்ஜிக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் கட்சியில் குடும்பத்தினர் ஆதிக்கம் எதுவும் இல்லை என்று சொல்ல முடியாது. அவரது உறவினர்கள் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். அவர்களது ஆதிக்கம் இருந்து வருகிறது. தற்போது அவரது கட்சியினர் மீது ஏற்பட்டுள்ள ஊழல் புகார், பணம் வாங்கியதாக வெளியாகும் வீடியோ ஆதாரங்கள் அவருக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன. மதன் மித்ரா போன்றவர்களுக்கு சீட் வழங்கப்பட்டிருப்பதும் ஆளுங்கட்சி மீதான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும், மார்க்சிஸ்ட் ஆட்சியைவிட திரிணமூல் ஆட்சி நன்றாக இருப்பதாக மக்கள் மத்தியில் பேச்சு உள்ளது. எனவே, ஆளுங்கட்சி மீண்டும் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago