கோவிட்-19 தடுப்பூசி; எண்ணிக்கை 95.89 கோடியை கடந்தது

By செய்திப்பிரிவு

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 95.89 கோடியை கடந்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 65,86,092 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 95.89 கோடியை (95,89,78,049) கடந்தது. 93,66,392 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 26,579 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,33,20,057 ஆக அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.04 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இதுவே அதிகமான அளவு.

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து 107 நாட்களாக 50,000க்கும் கீழ் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 14,313 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. 224 நாட்களில் இதுவே மிகவும் குறைந்த அளவாகும்.

நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,14,900; 212 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை. நாட்டில் மொத்தம் கொவிட் சிகச்சை பெறுபவர்களின் விகிதம் தற்போது 0.63 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 11,81,766 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 58.50 கோடி கொவிட் பரிசோதனைகள் (58,50,38,043) செய்யப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி கடந்த 109 நாட்களாக 3 சதவீதத்திற்கும் கீழே நீடித்து, தற்போது 1.48 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி தற்போது விகிதம் 1.21 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.

இந்த எண்ணிக்கை தொடர்ந்து 126 நாட்களாக 5 சதவீதத்திற்கு கீழேயும் 43 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், தொடர்ந்து 126 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்