லகிம்பூர் கேரி வன்முறையை கண்டித்து மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம் மற்றும் அதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் 4 விவசாயிகள் 2 பாஜகவினர் உட்பட 8 பேர் இறந்தனர்.
விவசாயிகள் மீதுமோதிய காரில் மத்திய உள்துறைஇணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகவும் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளும் எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தினர். சம்பவம் நடந்தபோது காரில் தனது மகன் ஆசிஷ் மிஸ்ரா இல்லை என்று மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறினார்.
» கரோனா தினசரி பாதிப்பு 18,132; சிகிச்சையில் உள்ளோர் 2,27,347
» காஷ்மீரில் வேட்டையை தொடங்கியது பாதுகாப்புபடை: பொதுமக்களை கொன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆசிஷ் மிஸ்ரா மீது உத்தர பிரதேச போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்தநிலையில் லகிம்பூர் கேரி வன்முறையை கண்டித்து மகாராஷ்டிராவில் இன்று ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
மும்பை உள்பட மாநிலம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதலே முழு அடைப்பு கடைபிடிக்கப்படுகிறது. ஆம்புலன்ஸ் சேவை, மருந்து கடைகள், பால் சப்ளை போன்ற அத்தியாவசிய பணிகள் தவிர மற்றவை அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தால் மாநிலம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago