காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சசி தரூர், ஆனந்த் சர்மா , ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் மீண்டும் நாடாளுமன்றத்தின் பல்வேறு நிலைக்குழுத் தலைவர்களாக நீடிக்கின்றனர்.
அந்த வகையில் சசி தரூரு தகவல் தொழில்நுட்ப நிலைக்குழுவின் தலைவராகவும், உள்துறையின் தலைவராக ஆனந்த் சர்மாவும், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைக்குழுவின் தலைவராக ஜெய்ராம் ரமேஷும் நீடிக்கின்றனர்
பாஜக மூத்த தலைவரும், பிஹார் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி, பணியாளர், குறைதீர்க்கும் பிரிவு, சட்டம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் நிலைக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
» கரோனா தடுப்பூசிக்கு பயன்படுத்தப்படும் சிரிஞ்சுகளை 3 மாதங்களுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை
» இந்தியாவில் 208 நாட்களில் இல்லாத அளவு கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது
2021-22ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இ்ந்த மாற்றியமைக்கப்பட்ட நிலைக்குழு கடந்த மாதம் 13 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக மக்களவை, மற்றும் மாநிலங்களை செயலாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
மக்களவை தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் ஆலோசித்து இந்த உறுப்பினர்களை நியமித்துள்ளனர்.
237 மாநிலங்களவை உறுப்பினர்களை பல்வேறு நிலைக்குழுக்கு மாநிலங்களவைத் தலைவர் நியமித்துள்ளார், 50 பேர் நிலைக்குழு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிலைக்குழு மாற்றம் செய்யப்பட்ட 50 எம்.பி.க்களில் 28 பேர் நாடாளுமன்ற வருகையில் மோசமாக உள்ளனர்,
இந்த 28 பேரில் 12 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கே கடந்த ஆண்டு வரவில்லை. 24 நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு உறுப்பினர்களை பரிந்துரை செய்வதில் எம்.பி.க்களின் வருகைப் பதிவும் கருத்தில் கொள்ளப்படும் .
மாநிலங்களவையில் பாஜக எம்.பி.க்கள் 9 பேர், திரிணமூல் காங்கிரஸில் 6 பேர், காங்கிரஸில் 4 பேர், சிவசேனா கட்சியில் 3 எம்.பிக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் தலா 3 பேர், திமுகா, பிஜூ ஜனதா தளம், டிஆர்எஸ் கட்சியில் தலா 2 எம்.பி.க்கள் நியமிக்கப்பட்டனர்.
இதன்படி, பாதுகாப்பு துறை நிலைக்குழுவின் தலைவராக பாஜக எம்.பி. ஜூவல் ஓரம் நீடிக்கிறார், ராகுல் காந்தியும் இதில் உறுப்பினராகத் தொடர்கிறார். கேரள எம்.பி. சசி தரூர், தகவல்தொழில்நுட்ப நிலைக்குழுவின் தலைவராக நீடிக்கிறார்.
சசி தரூரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் வெளிப்படையாக விமர்சித்து, எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும் அவர் தலைவர் பதவியில் தொடர்கிறார்.
உள்துறை அமைச்சக நிலைக்குழுவின் தலைவராக ஆனந்த் சர்மாவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் தலைவராக ஜெய்ராம் ரமேஷும் நீடிக்கின்றனர்.
நிதிஅமைச்சகத்தின் நிலைக்குழுவில் ரவி சங்கர் பிரசாத்தும், பணியாளர், குறைதீர்ப்பு, சட்டம் மற்றும் நீதிக்கான நிலைக்குழுவில் ரமேஷ் பொக்ரியாலும் சேர்க்கப்பட்டுள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சக நிலைக்குழுவில் உறுப்பினராக பிரகாஷ் ஜவடேகர் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்தஜூலை மாதம் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டபோது, இந்த 3 பேரும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.
தகவல் தொழில்நுட்ப நிலைக்குழுவில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரன்ஞன் கோகய் உறுப்பினராகவும், ரயில்வே நிலைக்குழுவில் சாத்வி பிரக்யா சிங் தாக்கூரும் நியமிக்கப்பட்டனர்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. விஜய்சாய் ரெட்டி, வர்தத்கத்துக்கான நிலைக்குழுத் தலைவராகவே நீடிக்கிறார். சுகாதாரம்மற்றும் குடும்ப நலன் நிலைக்குழுவில் சமாஜ்வாதிக் கட்சியின் ராம் கோபால் யாதவும், தொழில்துறை நிலைக்குழுவில் டிஆர்எஸ் எம்.பி. கே.கேசவ் ராவும், ரசாயனம் மற்றும் உரத்துறை நிலைக்குழுவில் திமுக எம்.பி. கனிமொழியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வேளாண்மை நிலைக்குழுவின் தலைவராக பி.சி. காடிகவுடரும், வெளியுறவுத்துறை நிலைக்குழுவில் இருந்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பாதுகாப்புத் துறைக்கும், நிலக்கரி மற்றும் உருக்கு நிலைக்குழுவில் இருந்த அனில் தேசாய் வர்த்தக நிலைக்குழுவுக்கும், வர்தத்கத்துறையில் இருந்த பிரியங்கா சதுர்வேதி, போக்குவரத்து மற்றும் சுற்றுலா கலாச்சார நிலைக்குழுவுக்கும் மாற்றப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago