ஆந்திர சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க கோரி போராட்டம் நடத்திய ரோஜா மயக்கம்

By என்.மகேஷ் குமார்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேச கட்சியின் உறுப்பினர்களை நகரி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா தரக்குறைவாக பேசியதாக ஓராண்டு இடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதைத் எதிர்த்து ரோஜா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உடனடியாக அவரை சட்டப்பேரவைக்குள் நுழைய அனுமதி வழங்க வேண்டும் என கூறி உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, ஹைதராபாத் உயர் நீதிமன்றம் பேரவை தலைவரின் சஸ்பெண்ட் மீது இடைக்கால தடை விதித்தது.

இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை காலை ரோஜா மற்றும் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உட்பட எம்எல்ஏக்கள் அனைவரும் பேரவைக்குள் செல்ல முயன்றனர். அப்போது, மெய்க்காப்பாளர்கள் பேரவை தலைவர் உத்தரவின்றி ரோஜாவை உள்ளே அனுமதிக்க முடியாது என மறுத்துவிட்டனர்.

இதைக் கண்டித்து பேரவை வளாகத்துக்குள் உள்ள காந்தி சிலை அருகே அமர்ந்து ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் 2-வது நாளாக நேற்றும் பேரவைக்குள் நுழைய முயன்ற ரோஜாவை மெய்காப்பா ளர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேச மடைந்த நடிகை ரோஜாவும், ஓய்.எஸ்.ஆர் காங்கி ரஸ் தொண்டர்களும் மீண்டும் காந்தி சிலை அருகே அமர்ந்து மவுனப் போராட்டம் நடத்தினர். அப்போது உடல் சோர்வு காரணமாக ரோஜா மயங்கி விழுந்தார்.

இதையடுத்து உடனடியாக அவர் நிஜாம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். சிகிச்சைக்கு பின், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்