காஷ்மீரில் சிறுபான்மையினரான இந்து மற்றும் சீக்கியர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ஆதரவு எதிர்ப்பு முன்னணி என்ற புதிய தீவிரவாத குழுவை கண்டறிந்து எதிர் தாக்குதல் நடத்த மத்திய அரசு விரிவான திட்டத்தை வகுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் அருகே புறநகர் பகுதியான சங்கம் இட்கா என்ற இடத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருதினங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மட்டும் இருந்தனர். வகுப்புகள் ஆன்லைனில் நடப்பதால் மாணவர்கள் யாரும் இல்லை. காலை 11.15 மணியளவில் அந்தப் பள்ளியில் துப்பாக்கிகளோடு இரண்டு தீவிரவாதிகள் திடீரென புகுந்தனர்.
தலைமை ஆசிரியர் சுபுந்தர் கவுர் மற்றும் ஆசிரியர் தீபக் சந்த் ஆகியோரை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் இருவரும் இறந்தனர்.
தகவல் அறிந்து போலீஸாரும் பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். இதுவரை காஷ்மீர் பண்டிட் மருந்தாளர் மகான் லால் பிந்த்ரூ, பள்ளி முதல்வர் சுபிந்தர் கவுர், பள்ளி ஆசிரியர் தீபக் சந்த் மற்றும் பீகாரைச் சேர்ந்த வீரேந்தர் பாஸ்வான் ஆகியோர் சமீபத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து செயல்படும் ‘எதிர்ப்பு முன்னணி’ என்ற தீவிரவாத இயக்கம் உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிறுபான்மை இந்து மற்றும் சீக்கிய சமூகங்களை பயமுறுத்தும் நோக்கத்துடன் பாகிஸ்தானால் தூண்டப்பட்ட புதிய வன்முறை திட்டமாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) உள்ளூர் தீவிரவாதிகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த எதிர்ப்பு முன்னணி, இந்த சிறுபான்மையினரான ஐந்து அப்பாவிகளை சுட்டுக் கொன்றுள்ளனர்.
இதனையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிறுபான்மை இந்து மற்றும் சீக்கிய சமூகங்களை பயமுறுத்தும் எதிர்ப்பு முன்ணணியை சேர்ந்த தீவிரவாதிகளை ஒடுக்க விரிவான திட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அக்டோபர் 7 அன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது புலனாய்வு அமைப்புகள் மற்றும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஆகிய நான்கு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு குழுக்கள் தீவிரவாத அமைப்புகளை அகற்ற தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
ஸ்ரீநகரில் எதிர்ப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) எல்லை முழுவதும் ஊடுருவலைத் தடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு, ஸ்ரீநகரில் உள்ள நதிபோரா பகுதியில் நடந்த என்கவுன்டரில், ஷோபியனைச் சேர்ந்த எல்இடி தீவிரரவாதி அகிப் பஷீரை ஜே-கே போலீசார் சுட்டுக் கொன்றனர். உடலில் இருந்து ஒரு ஏகே -47 துப்பாக்கி மற்றும் இரண்டு இதழ்கள் மீட்கப்பட்டன .
சிறுபான்மையினர் இந்து மற்றும் சீக்கிய சமூகத்தினரை றிவைக்கும் புதிய முயற்சி முறியடிக்கப்பட்டது. மற்றொரு தீவிரவாதி, பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று கூறப்படும், என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து தப்பிக்க முடிந்தது.
பாதுகாப்புப் படையினர் ஸ்ரீநகர் நகரத்தை ஸ்கேன் செய்து புதிய எதிர்ப்பு முன்னணியை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு ஒடுக்கி வருகின்றனர்.
காஷ்மீர் காவல்துறையின் மூத்த அதிகாரி இதுகுறித்து கூறுகையில் ‘‘ மூன்று உள்ளூர் தீவிரவாதிகள், எல்இடி முன்னணியின் இரண்டு தீவிரவாதிகள், ஸ்ரீநகரில் அப்பாவிகளை ஆயுதங்களால் குறிவைத்து தாக்கியுள்ளனர். இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தாக்குதல்களை வழிநடத்தும் பாகிஸ்தான் தீவிரவாதி தலைவர் ஒருவர் இருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளோம்’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
28 mins ago
இந்தியா
49 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago