மாணவர்கள் குறித்த நேரத்துக்குள் கல்விக்கட்டணத்தைச் செலுத்தாவிட்டால் பள்ளி நிர்வாகம் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏராளமான மக்களுக்கு வேலையிழப்பு, ஊதியக் குறைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம், ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்ட அரசாணையில், தனியார் பள்ளிகள், அரசிடம் இருந்து உதவி பெறாத பள்ளிகள், மாணவர்கள் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் அல்லது தள்ளுபடி செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
ஆனால் ஒரு வழக்கு ஒன்றில் கடந்த மே 3-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அரசிடம் இருந்து உதவி பெறாத பள்ளிகள், கரோனா காலத்தில் குறைந்த அளவு கட்டணம் வசூலிக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் கட்டணம் வாங்கக்கூடாது என்று மாநில அரசுகள் தனியார் பள்ளிகளின் சுயாட்சித்தன்மையை குலைக்கக்கூடாது எனத் தெரிவித்திருந்தது.
» இந்தியாவில் புதிதாக மேலும் 19,740 பேருக்கு கரோனா தொற்று: ஒரே நாளில் 248 பேர் உயிரிழப்பு
» பதவி விலகினார் மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன்
இந்த உத்தரவு வந்ததையடுத்து, ராஜஸ்தான் அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஏராளமான தனியார் பள்ளிக்கூட நிர்வாகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன. சில பெற்றோர் கடந்த ராஜஸ்தான் அரசின் உத்தரவை கணக்கில் வைத்து கட்டணம் செலுத்தாமல் இருந்தனர்.
இந்நிலையில் பள்ளி நிர்வாகக் கூட்டமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு கல்விக்கட்டணத்தை வசூலிக்க அனுமதி கோரப்பட்டது. இது தொடர்பாக வழக்கறிஞர் ரோமி சாக்கோ மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வில் கடந்த இரு நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்டது அப்போது, கடந்த மார்ச் மாதம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக விளக்கம் அளித்தார்.
நீதிபதிகள் அமர்வு கூறுகையில் “ அந்த தீர்ப்பில் மாணவர்கள் தங்கள் கல்விக் கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்தாமல் இருந்தால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பள்ளிகளுக்கு எந்தவிதத் தடையும் விதிக்கவில்லை.
இந்த தீர்ப்பின் சாரம்சம் என்பது, மாணவர்களின் பெற்றோர் அல்லது காப்பளர் கட்டணத்தை செலுத்த அவகாசம் கொடுக்கப்பட்டது, அதாவது தவணயை செலுத்த உரிய வழி செய்யப்பட்டது. பெற்றோர் அல்லது காப்பாளர் செலுத்த வேண்டிய கட்டணத்தில் விலக்கு அளி்கக் கோரி, கடமையிலிருந்து விலக்கு அளித்து தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை.
ஆதலால், கல்விக்கட்டணத்தை வேண்டுமென்றே உரிய காலத்துக்குள் செலுத்தாமல் இருந்தால், பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம். ஒருவேளை 2020-21ம் கல்வியாண்டு கட்டணத்தை செலுத்துவதில் பெற்றோர் அல்லது காப்பாளருக்கு உண்மையில் சிரமம் இருந்து யாரேனும் கோரிக்கை வைத்தால், அதை பள்ளி நிர்வாகம் கருணையுடன் பரிசீலிக்கலாம்
இவ்வாறு விளக்கம் அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago