காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: ஆளுநருடன் அமித் ஷா நாளை ஆலோசனை

By செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீரில் அண்மைக்காலமாக தீவிரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும்நிலையில் ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை ஆலோசனை நடத்துகிறார்.

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் அருகே புறநகர் பகுதியான சங்கம் இட்கா என்ற இடத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மட்டும் இருந்தனர். வகுப்புகள் ஆன்லைனில் நடப்பதால் மாணவர்கள் யாரும் இல்லை. காலை 11.15 மணியளவில் அந்தப் பள்ளியில் துப்பாக்கிகளோடு இரண்டு தீவிரவாதிகள் திடீரென புகுந்தனர்.

தலைமை ஆசிரியர் சுபுந்தர் கவுர் மற்றும் ஆசிரியர் தீபக் சந்த் ஆகியோரை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் இருவரும் இறந்தனர்.

தகவல் அறிந்து போலீஸாரும் பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணி நடக்கிறது. இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து செயல்படும் ‘எதிர்ப்பு முன்னணி’ என்ற தீவிரவாத இயக்கம் உள்ளது.

பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதற்கு தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையின் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்து இருப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் அண்மைக்காலமாக தீவிரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும்நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்