பிஎம் கேர்ஸ் நிதியில் 35 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் தொடக்கம்

By செய்திப்பிரிவு

பிஎம் கேர்ஸ் நிதியின் கீழ் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை நாளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதற்கு பின் இந்தியாவின் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தித் திறனை அதிகரிக்க அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் தற்போது வரை பிஎம் கேர்ஸ் மூலம் மொத்தம் 1224 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 1100-க்கும் அதிகமான நிலையங்கள் உற்பத்தியைத் தொடங்கி விட்டன.

இவற்றில் நாளொன்றுக்கு 1750 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி ஆகிறது. இத்துடன் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் செயல்பட உள்ளன.

மலைப்பகுதிகள், தீவுகள், சிக்கலான நிலைமை கொண்ட பகுதிகள் ஆகியவற்றின் சவால்களை கையாள்வதுடன் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

7,000-க்கும் அதிகமான ஊழியர்களுக்கு பயிற்சி அளித்ததன் மூலம் இந்த உற்பத்தி நிலையங்களின் இயக்கம் மற்றும் பராமரிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 35 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கீழ் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ள 35 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.உத்தரகாண்ட் ஆளுநர் மற்றும் முதல்வருடன் மத்திய சுகாதார அமைச்சரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்