நேஷனல் ஹெரால்டு வழக்கு ஒத்திவைப்பு

By ஏஎன்ஐ, பிடிஐ

மறைந்த முன்னாள் பிரதமர் நேரு, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை தொடங்கினார். இந்த பத்திரிகையை அசோசி யேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் நிர்வகித்து வந்தது.

இதன் பல கோடி ரூபாய் மதிப் புள்ள சொத்துகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி, கட்சியின் மூத்த தலைவர் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே மற்றும் சாம் பிட்ரோடா ஆகியோர் அபகரித்துக் கொண்டதாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்துள்ள இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் 2010-11-ம் நிதியாண்டுக்கான வரவு, செலவு விவரங்களை தாக்கல் செய்ய காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்று அந்த கட்சியின் வழக்கறிஞர் கோரினார். அதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் லவ்லீன், வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்