பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில், துப்பாக்கியை காட்டி மூன்று பேரால் கடத்தப்பட்ட கார், ஜம்மு-காஷ்மீர் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் கார் நிராதரவாக விடப்பட்டிருந்தது.
சில நாட்களுக்கு முன்பு, பதான்கோட் அருகே சுஜன்பூர் மாவட்டத்தில் கவுரவ் பதானியா என்பவரிடமிருந்து அடையாளம் தெரியாத மூன்று பேர் துப்பாக்கியைக் காட்டி அவரின் காரைக் கடத்திச் சென்றனர்.
பதான்கோட் விமானப்படைத் தளம் தாக்குதலுக்கு முன்பாக, காவல் கண்காணிப்பாளர் ஒருவரின் கார் இவ்வகையில்தான் கடத்தப்பட்டது என்பதால், பாதுகாப்புப் படையினர் உஷாரடைந்தனர். தீவிரவாத செயலுடன் இதற்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், கடத்தப்பட்ட கார், ஜம்மு காஷ்மீர் எல்லையில் அநாதையாக விடப்பட்டிருந்தது. கடத்தியவர்கள் யார் என்பது இதுவரை தெரியவில்லை.
கடந்த மாதம் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் 6 தீவிரவாதிகளுடன் பஞ்சாப் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹோலி பண்டிகையையொட்டி டெல்லியில் தாக்குதல் நடத்தப்படலாம் என மத்திய புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago