மணிப்பூரில் ட்ரோன் மூலம் கரோனா தடுப்பூசி விநியோகம் பரிசோதனையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று தொடங்கி வைத்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திரமோடியின் தொலைநோக்கு தலைமைக்கு நன்றி. அவரது தலைமையின் கீழ் நாடு வேகமாக முன்னேறுகிறது. இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள். தொழில்நுட்பம் வாழ்க்கையை எப்படி எளிதாக்குகிறது மற்றும் சமூக மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை இன்றைய தினம் காட்டியுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன், முதல் முறையாக, தெற்கு ஆசியாவில் கரோனா தடுப்பூசியை 15 கி.மீ தூரத்துக்கு 12 முதல் 15 நிமிடங்களில் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளது.
» பண்டோரா பேப்பர்ஸ்; விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு
» ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் மறுப்பு: அக். 7 வரை போலீஸ் காவல்
மணிப்பூரின் விஷ்ணுபூர் மாவட்ட மருத்துவமனையில் இருந்து கரங் தீவில் உள்ள லோதக் ஏரி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு கொரோனா தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டன. இந்த இடங்களுக்கு சாலை வழியான தூரம் 26 கி.மீ. லோதக் ஏரியில் 10 பேர் முதல் டோஸ் தடுப்பூசிகளையும், 8 பேர் 2வது டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்னர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது மணிப்பூர், நாகாலாந்து, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு ட்ரோன் மூலம் கரோனா தடுப்பூசிகள் விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கான்பூர் ஐஐடியுடன் இணைந்து மேற்கொண்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
22 mins ago
இந்தியா
50 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago