மும்பையில் கப்பலில் போதை ஒழிப்புப்பிரிவு போலஸ் நடத்திய சோதனையில் பல கோடி மதிப்புள்ள போதை பொருள் சிக்கியது. இந்த வழக்கில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையில் நேற்று நள்ளிரவில் ஒரு கப்பலில் சிறப்பு விருந்துக்கு சிலர் ஏற்பாடு செய்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கோடீஸ்வரர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள், திரையுலக பிரபலங்கள், மாடலிங் உலகை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் இடம் பெற்றிருந்தனர். அங்கு போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்த போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீஸார் பயணிகள் போல அதே கப்பலில் ஏறினர். மும்பையில் இருந்து கிளம்பி கப்பல் கடலுக்குள் பயணித்த போது அங்கு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சிலர் போதை பொருள் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து 8 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த கோகைன் உள்ளிட்ட விலைமதிக்கத்தக்க போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
» 12500 வாக்குகள் முன்னிலை: பவானிபூரில் மீண்டும் வரலாறு படைக்கிறார் மம்தா பானர்ஜி
» பவானிபூர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மம்தா பானர்ஜி முன்னிலை
இந்த வழக்கு தொடர்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் மகன் ஆரியன் உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் ஆரியன் கானின் செல்போனை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் வாங்கி ஆய்வு செய்து வருகின்றனர். ஆரியன் யார் யாருடன் பேசினார், என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago