இந்தியாவின் மொத்த கோவிட் தடுப்பூசியின் எண்ணிக்கை 89 கோடியைக் கடந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 89 கோடியைக் கடந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 64,40,451 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 86,46,674 முகாம்களில் 89,02,08,007 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
» ‘‘இது அவமானம் இல்லை என்றால் வேறு என்ன?’’ - ஹரீஷ் ராவத்துக்கு அம்ரீந்தர் சிங் சரமாரி கேள்வி
» யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று அமரீந்தர் சிங் எண்ணுகிறார்: ஹரீஷ் ராவத் சாடல்
கடந்த 24 மணி நேரத்தில் 28,246 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,30,43,144. ஆக உயர்ந்துள்ளது.
நம் நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம், 97.86 சதவீதமாக உள்ளது. இது கடந்த மார்ச் 2020-க்குப் பிறகு மிக அதிகமாகும்.
தொடர்ந்து 96 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 26,727 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,75,224 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 0.82 சதவீதம் ஆகும். இது 196 நாட்களில் மிகக் குறைவானது.
கடந்த 24 மணி நேரத்தில் 15,06,254 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 56,89,56,439 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாராந்திர தொற்று உறுதி விகிதம் தொடர்ந்து 98 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 1.70 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 176 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 32 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், தொடர்ந்து 115 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
48 mins ago
இந்தியா
43 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago