அதானியின் ஒரு நாள் வருமானம் ரூ.1,000 கோடி: இந்தியாவின் 2-வது பணக்காரர் ஆனார்

By செய்திப்பிரிவு

கடந்த ஆண்டில் அதானி நாளொன்றுக்கு ரூ.1,000 கோடி வருமானம் ஈட்டியுள்ளார் என்று ஐஐஎஃப்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐஐஎஃப்எல் நிறுவனம் 2021-ம் ஆண்டுக்கான இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ரூ.7.18 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக முகேஷ் அம்பானி குடும்பம் முதல் இடம் பிடித்துள்ளது. சென்ற ஆண்டில் நாளொன்றுக்கு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் ரூ.163 கோடி அளவில் வருமானம் ஈட்டியுள்ளது.

கவுதம் அதானி குடும்பம்ரூ.5.05 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 2-ம் இடம் பிடித்துள்ளது. நாளொன்றுக்கு ரூ.1,000 கோடிஅளவில் அளவில் அவருடைய குடும்பம் வருமானம் ஈட்டியுள்ளது.

அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.1.40 லட்சம் கோடி சொத்து மதிப்பைக்கொண்டு இந்தியக் கோடீஸ்வரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் அதானி இருந்தார்.

இந்நிலையில் அவருடைய சொத்து மதிப்பு ரூ.5.05 லட்சம்கோடியாக உயர்ந்து 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மூன்றாவது இடத்தில் சிவ் நாடார் குடும்பம் உள்ளது. சென்றஆண்டில் சிவ் நாடார் குடும்பத்தின் சொத்து மதிப்பு 67 சதவீதம் உயர்ந்து ரூ.2.36 லட்சம் கோடியாக உள்ளது. நாளொன்றுக்கு ரூ.260 கோடி அளவில் வருமானம் ஈட்டியுள்ளனர்.

எஸ் பி இந்துஜா குடும்பம் 4-வது இடத்தில் உள்ளது. அவர்களது வருமானம் சென்ற ஆண்டுநாளொன்றுக்கு ரூ.209 கோடியாகஇருந்துள்ளது. அவர்களது சொத்துமதிப்பு 53% அதிகரித்து ரூ.2.20 லட்சம் கோடியாக உள்ளது.

5-வது இடம் பிடித்துள்ள எல் என் மிட்டல் குடும்பம், சென்ற ஆண்டில் நாளொன்றுக்கு ரூ.312 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. அவர்களின் சொத்து மதிப்பு 187 சதவீதம் உயர்ந்து ரூ.1.7 லட்சம் கோடியாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்