நீங்கள் நன்றாக நடனமாடுகிறீர்கள்: சட்ட அமைச்சரை ட்விட்டரில் பாராட்டிய பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

அருணாச்சலப் பிரதேசத்தில் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களைப் பார்வையிடச் சென்ற மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு, கிராமவாசிகளுடன் இணைந்து நடனமாடினார். அவர் அந்த நடனத்தை ட்விட்டரில் பகிர அதனைப் பார்த்துப் பாராட்டு தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

அருணாச்சலப் பிரதேசத்தில் காஸாலாங் கிராமத்தில் விவேகானந்தா கேந்த்ரா வித்யாலா திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைப் பார்வையிட அங்கு சென்றிருந்தார் அமைச்சர் கிரன் ரிஜிஜு.

அருணாச்சலப் பிரதேசத்தின் காஸாலாங் கிராமத்தில் மிஜி அல்லது சஜோலாங் எனப்படும் பழங்குடிகள் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் ஊருக்கு வரும் விருந்தாளிகளை பாரம்பரிய நடனமாடி வரவேற்பார்கள். அதே பாணியில் தான் அமைச்சர் கிரன் ரிஜிஜூவையும் அவர்கள் வரவேற்றனர்.

அப்போது அமைச்சரும் திடீரென உற்சாகமாகி மக்களுடன் இணைந்து நடனமாடினார். அவர் தனது நடனத்தை கூ எனப்படும் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். அதேபோல் ட்விட்டரிலும் பகிர்ந்திருந்தார். நாட்டுப்புற பாடலும் நடனமும் அருணாச்சலப் பிரதேச மக்களின் உயிர்நாடி என்று பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோவைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில், "நமது சட்ட அமைச்சர் நன்றாக நடனமாடுகிறார். அருணாச்சலப் பிரதேசத்தின் உயிரோட்டம் நிறைந்த கலாச்சாரத்தைக் காண்பதில் மகிழ்ச்சி" எனப் பதிவிட்டிருக்கிறார்.

கிரன் ரிஜிஜு, இந்திய குடிமைப்பணி தேர்வை எழுதி அதிகாரியாக இருந்தார். பின்னாளில் அவர் அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இறங்கினார். அருணாச்சலப் பிரதேசம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் கிஷோர் குமார் பாடலைப் பாடி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்