கடந்த 24 மணி நேரத்தில் 1,02,22,525 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 87 கோடியைக் கடந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,02,22,525 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 84,62,957 முகாம்களில் 87,07,08,636 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 26,030 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,29,58,002 ஆக உயர்ந்துள்ளது.
» ‘‘முதல் வெற்றி; பாஜகவுக்கு பெருமை’’ புதுச்சேரி எம்.பி. செல்வகணபதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
» கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தான் பொருத்திய ஏசியை எடுத்துச் சென்ற கன்னையா குமார்
நம் நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 97.81 சதவீதமாக உள்ளது. இது கடந்த மார்ச் 2020-க்குப் பிறகு மிக அதிகமாகும்.
தொடர்ந்து 93 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 18,795 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,92,206 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 0.87 சதவீதம் ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 13,21,780 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 56,57,30,031 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாராந்திர தொற்று உறுதி விகிதம் தொடர்ந்து 95 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 1.88 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 1.42 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது.
இந்த எண்ணிக்கை 29 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், தொடர்ந்து 112 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago