நாட்டில் 3 மக்களவைத் தொகுதிகள், 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 30-ம் தேதி நடக்கும் எனத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 2-ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
''நாட்டில் கரோனா தொற்று, மழை வெள்ளம், பண்டிகைக் காலம், குறிப்பிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்காலம் ஆகியவற்றை ஆய்வு செய்து, அனைத்துச் சூழல்களையும் கருத்தில் கொண்டு காலியாக இருக்கும் 3 மக்களவைத் தொகுதிகள், தாத்ரா நாகர் ஹாவேலி, டாமன் டையூ, மத்தியப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காலியாக இருக்கும் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது. இதன்படி இடைத் தேர்தல் அக்டோபர் 30-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 2-ம் தேதியும் நடக்கும்''.
இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago