அரசு விளம்பரங்களில் தலைவர் கள் படங்களுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
அரசு செலவில் வெளியிடப்படும் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி படங்களைத் தவிர, வேறு அரசியல் தலைவர் களின் படங்களை வெளியிடக் கூடாது என்று கடந்த ஆண்டு மே மாதம் 13-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் டெல்லி மாநில அரசுகள் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ள தால், அந்த அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்றும், அரசு விளம்பரங் களை கண்காணிக்க மத்திய அரசு மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்க வலியுறுத்தியும் மனுக் கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதற்கிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தமிழகம், கர்நாடகா, சத்தீஸ்கர், அசாம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிஷா மாநிலங்கள் சார்பிலும் மனு தாக்கல் செய்யப் பட்டிருந்தது.
தவறான உத்தரவு
இம்மனுக்கள் அனைத்தும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பினாகி சந்திர கோஸ் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய, மாநில அரசுகள் சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி ஆஜராகி வாதிட்டார்.
அவர் வாதிடும்போது, “அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் படங்கள் இடம் பெறக் கூடாது என்ற உத்தரவு தவறா னது. அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு. அரசு விளம்பரங்கள், பதாகைகள் மூலம்தான் அரசின் திட் டங்கள், கொள்கைகள் மக்களுக்கு சென்றடையும். தகவல்கள் என்று வரும்போது அதில் தலைவர்களின் படங்களும் அடங்கும்.
கூட்டாட்சி நடைமுறையில் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் படங்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்பது தனிநபர் துதி பாடும் முறைக்கு வழிவகுக்கும். ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். ஜனநாயக நடைமுறையில் பிரதமருக்கும், முதல்வருக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இருவருமே மக்களின் பிரதிநிதிகள் தான்.
இதில் ஒருவரது படத்தை வெளி யிட அனுமதிப்பதும், மற்றவர்கள் படத்தை வெளியிட தடை விதிப்பதும் தவறானது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு ஆட்சி நடக்கும்போது பிரதமர் படத்தை மட்டும் வெளியிடும்போது, மற்ற அமைச்சர்கள் முகம் அற்றவர் களாக வெளியில் தெரியாதவர் களாக ஆகிவிடுவார்கள். இது தனி நபர் துதிபாடும் செயலாகி விடும்.
3 பேருக்கு ஏன் விதிவிலக்கு?
போலியோ சொட்டு மருந்து வழங்குதல், மருத்துவ திட்டங் களை செயல்படுத்துதல், கலாச் சார நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தலைவர்களின் படங்களை வெளி யிடும்போது மக்கள் ஈர்க்கப்பட்டு, திட்டங்களை திறம்பட செயல் படுத்த முடியும். இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்டிருக்க கூடாது. அப்படி தலையிட்டுவிட்ட நிலையில், எதற்காக குடியரசுத் தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி படங்களை வெளியிட மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட் டுள்ளது? எனவே, நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று வாதிட்டார். இவ்வழக்கில் தொடர்ந்து விவாதம் நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
45 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago