பிரதமர் மோடிக்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் ட்விட்டரில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது.
குவாட் மாநாடு, ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்துள்ளார். அவருக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடி இன்று இரவு 7 மணிக்கு வாஷிங்டனில் உலகளாவிய மிகப்பெரிய தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.
முன்னதாக அவர் டெல்லியில் இருந்த தனி விமானத்தில் வாஷிங்டன் புறப்பட்டுச் சென்றபோது மேலும் பிரதமர் மோடி தனது நீண்ட விமானப் பயணத்தில் தனது அலுவலகப் பணிகளைக் கவனித்துள்ளார்.
» கோவிஷீல்ட் விவகாரம்; தேசிய சுகாதார ஆணைய தலைமை நிர்வாக அதிகாரியுடன் பிரிட்டன் தூதர் சந்திப்பு
» 100% முதல் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திய 6 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு நீண்ட விமானப் பயணம் என்பதால், பல்வேறு முக்கியக் கோப்புகள், அலுவலகப் பணிகளை விமானப் பயணத்திலேயே பிரதமர் மோடி செய்தார்.
அந்த புகைப்படத்தை தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து பிரதமர் மோடி “நீண்ட விமானப் பயணம் என்பது சில கோப்புகளைப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது,” என குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் மோடி விமானத்தில் அலுவலகப் பணிகளைப் கவனிக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் பகிரபட்டு வைரலானது.
இந்தநிலையில் பிரதமர் மோடிக்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் ட்விட்டரில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘முன்னாள் பிரதமர் மன்மோகன் ஏர் இந்தியா விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இது காப்பியடிக்க கடினமான படம்’’ என தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி காங்கிரஸ் நிர்வாகிகளும் வெவ்வேறு புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பிரதமர் மோடியின் படத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதுபோலவே முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் விமானத்தில் கோப்பு பார்த்த புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago