இந்திய விமானப் படை தளபதியாக ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி நியமனம்

By ஏஎன்ஐ

இந்திய விமானப் படை தளபதியாக ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ்.பதூரியாவின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் அடுத்த தளபதியாக வி.ஆர்.சவுத்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மிக் 29 ரக விமானத்தை இயக்குவதில் தேர்ந்த முன்னோடி. ஆகஸ்ட் 1, 2020 தொடங்கி, இவர் மேற்கு ஏர் கமாண்ட் தலைவராக இருக்கிறார்.

இவருடைய பணிக்காலத்தில் 3800 மணி நேரம் விமானப் பயண அனுபவம் கொண்டுள்ளார். இந்நிலையில், இந்திய விமானப் படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சக அதிகாரபூர்வ ட்விட்டரில் முதன்மை செய்தித் தொடர்பாளர் பரத் பூஷன், "இந்திய விமானப் படை தளபதியாக ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரியை நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தற்போதைய விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ்.பதூரியாவின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

44 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்