கரோனா ஊரடங்கு காலத்தில் தொடங்கப்பட்ட தேசிய தொலைமருத்துவச் சேவையான இ-சஞ்சீவனி மூலம்
1.2 கோடி மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செல்பேசி வழியாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் இ-சஞ்சீவனி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் புற நோயாளிகளுக்கு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தேசிய தொலைமருத்துவச் சேவையான இ-சஞ்சீவனி, 1.2 கோடி ஆலோசனைகளை வழங்கி நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் மாபெரும் தொலை மருத்துவச் சேவையாக வளர்ச்சி அடைந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 90,000 பேருக்கு சேவை அளிப்பதன் வாயிலாக நோயாளிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
» கோவிஷீல்டு அனுமதி; பிரிட்டனின் செயல் பாரபட்சமானது- பரஸ்பர நடவடிக்கை: இந்தியா எச்சரிக்கை
இ-சஞ்சீவனி ஆயுஷ்மான் பாரத்- சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களில் சுமார் 67,00,000 ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களில் இந்தச் சேவை அளிக்கப்படுகிறது.
இந்தியாவின் நகர் மற்றும் ஊரகப்பகுதிகளில் நிலவும் மின்னணு சுகாதார இடைவெளியை இ-சஞ்சீவனி தேசிய தொலை மருத்துவச் சேவை நீக்குகிறது.
இந்தியாவில் மொத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள தொலை மருத்துவ ஆலோசனைகளில் (12033498) முதல் 10 இடங்களை வகிக்கும் மாநிலங்களின் விவரங்கள் வருமாறு:
ஆந்திரப்பிரதேசம் (37,04,258), கர்நாடகா (22,57,994), தமிழ்நாடு (15,62,156), உத்தரப்பிரதேசம் (13,28,889), குஜராத் (4,60,326), மத்தியப் பிரதேசம் (4,28,544), பிஹார் (4,04,345), மகாராஷ்டிரா (3,78,912), மேற்கு வங்கம் (2,74,344) மற்றும் கேரளா (2,60,654) ஆகியவை ஆகும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago