கோவிஷீல்டு அனுமதி;  பிரிட்டனின் செயல் பாரபட்சமானது- பரஸ்பர நடவடிக்கை: இந்தியா எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

பிரிட்டனில் கோவிஷீல்டு தடுப்பூசி அங்கீகரிக்கப்படாதது பாரபட்சமான செயல், இந்த பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் பரஸ்பர நடவடிக்கை எடுக்கும் உரிமை நமக்கு உண்டு என வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ வர்த்தன் சிரிங்கலா கூறியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பானது, ஃபைஸர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், சைனோஃபார்ம், ஆஸ்ட்ராஜெனிக்கா ஆகிய தடுப்பூசிகளை மட்டுமே அவசரகால பயன்பாட்டுக்காக அங்கீகரித்துள்ளது.

இதனால் இந்தியா, துருக்கி, ஜோர்டான், தாய்லாந்து, ரஷ்யா, போன்ற நாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மக்கள் எல்லோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாகவே கருதப்படுகின்றனர்.

கரோனாவுக்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

கரோனாவுக்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரிட்டன் அரசு கட்டாயப்படுத்துவதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது ஒரு இனவெறி செயல் என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் பிரிட்டனுக்கு வந்தால் தனிமைப்படுத்திக் கொள்ளச் சொல்வது காயப்படுத்தும் செயல் என்று பதிவிட்டு இருந்தார்.மேலும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் அவர் தனது பிரிட்டன் பயணத்தையும் ரத்து செய்துள்ளார்.

இந்தநிலையில் வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ வர்த்தன் சிரிங்கலா செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறியதாவது:

பிரிட்டனில் கோவிஷீல்டு அங்கீகரிக்கப்படாதது பாரபட்சமான செயல். இது, பிரிட்டன் செல்லும் நமது குடிமக்களை பாதிக்கிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரத்தை பிரிட்டனின் வெளியுறவு செயலாளரிடம் பேசியுள்ளார். பிரிட்டன் வரும் இந்தியர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டாலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற விதிமுறையில் மாற்றம் செய்வதாக அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளது. இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் பரஸ்பர நடவடிக்கை எடுக்கும் உரிமை நமக்கு உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்