நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 96,46,778 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 81.85 கோடியைக் கடந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 96,46,778 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி தகவலின்படி, மொத்தம் 80,35,135 முகாம்களில் 81,85,13,827 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
» ம.பி. மாநிலங்களவைத் தேர்தல்: மத்திய அமைச்சர் எல்.முருகன் வேட்புமனுத் தாக்கல்
» கோவாவில் தனியார் துறையில் 80 சதவீத இடஒதுக்கீடு: கேஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி
கடந்த 24 மணி நேரத்தில் 34,469 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,27,49,574 ஆக உயர்ந்துள்ளது.
நம் நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 97.75 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 86 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 26,115 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,09,575 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 0.92 சதவீதம் ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 14,13,951 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 55,50,35,717 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாராந்திர தொற்று உறுதி விகிதம் தொடர்ந்து 88 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.08 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 1.85 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 22 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், தொடர்ந்து 105 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago