என் பிள்ளைகளே எனக்கு மீண்டும் பிறந்தார்கள்: இரட்டையரை பெற்ற தாய் ஆனந்த கண்ணீர்

By என். மகேஷ்குமார்

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி படகு விபத்து ஏற்பட்டது. ராஜமுந்திரியில் இருந்து பத்ராச்சலத்திற்குஒரு படகில் சுமார் 77 பேர் சென்றனர்.

இந்தப் படகு கோதாவரி ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கண்ணாடி டிசைன் செய்யும் அப்பல்ராஜு என்பவரின் குடும்பத் தில், அவரது தாய், தந்தை, இரட்டை மகள்களான கீதா வைஷ்ணவி, அனன்யா மற்றும் சித்தப்பா, சித்தி என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். இவரும், இவரது மனைவி பாக்யலட்சுமி மட்டுமே இவர்களது குடும்பத்தில் உயிர் பிழைத்தனர்.

இந்த சோகம் இன்னமும் நீங்காமலே இருக்கும் இவர்களது குடும்பத்தில் தற்போது ஒரு மகிழ்ச்சியை தரும் விஷயம் அரங்கேறியுள்ளது. பாக்யலட்சுமி மீண்டும் கர்ப்பம் தரித்தார். இவருக்கு கடந்த 15-ம் தேதி இரட்டையர்கள் பிறந்தனர். இரண்டும் பெண் பிள்ளைகள். இதே தேதியில்தான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் தங்களது இரு பெண் குழந்தைகளை படகு விபத்தில் இழந்தனர். ஆனால், அதே தேதியில் மீண்டும் 2 பெண் குழந்தைகள் பிறந்திருப்பதால், ‘‘விபத்தில் இறந்த என் பிள்ளைகள் மீண்டும் பிறந்துள்ளனர்’’ என தாய் பாக்யலட்சுமி ஆனந்த கண்ணீருடன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்