மருத்துவ முதுநிலை சிறப்பு படிப்புகளுக்காக ‘நீட் எஸ்எஸ்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பாணை கடந்த ஜூலை 23-ம் தேதி வெளியிடப்பட்டது.
இதன்பின் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி மீண்டும் ஓர் அறிவிப்பாணை வெளியானது. இந்த அறிவிப் பாணையில், நுழைவுத் தேர்வு நடைமுறையில் முக்கிய மாற்றங் கள் செய்யப்பட்டிருந்தன.
இதை எதிர்த்து 41 விண் ணப்பதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் தங்கள் மனுக்களில் கூறியிருப்பதாவது:
வரும் நவம்பர் 13, 14-ம் தேதி ‘நீட் எஸ்எஸ்' நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. மிக குறுகிய காலத்தில் திடீரென தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன.
ஏற்கெனவே பின்பற்றப்பட்ட நடைமுறையின்படி சிறப்பு மருத் துவ பாடப்பிரிவில் இருந்து 60 மதிப்பெண்களும், இதர பாடப்பிரிவுகளில் இருந்து 40 மதிப்பெண்களும் கேள்விகள் இடம் பெற்றிருக்கும். புதிய நடை முறையில் ஏறத்தாழ 100 சதவீத கேள்விகளும் பொது மருத்துவப் பிரிவில் இருந்து கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய நடைமுறைப்படி தேர்வு
நுழைவுத் தேர்வுக்கான அறி விப்பாணை வெளியான பிறகு தேர்வு நடைமுறையில் திடீரென மாற்றம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. மருத்துவ முதுநிலை மாணவர்களின் நலன் கருதி பழைய நடைமுறையின்படி தேர்வு நடத்த வேண்டும்.
இவ்வாறு மனுக்களில் கோரப் பட்டுள்ளது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சந்திரசூட், நாகரத்னா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுக்கள் தொடர்பாக விளக்கம் அளிக் கும்படி மத்திய அரசு, தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீஸ்அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 27-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago