கோவிட் தடுப்பூசி: 80 கோடியைக் கடந்தது 

கோவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை: 80 கோடியைத் கடந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 80 கோடியைக் கடந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 85,42,732 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 79,15,457 முகாம்களில் 80,43,72,331 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 38,945 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,26,71,167 ஆக உயர்ந்துள்ளது.

நம் நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 97.68 சதவீதமாக உள்ளது.

தொடர்ந்து 84 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 30,773 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,32,158 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 0.99 சதவீதம் ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 15,59,895 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 55,23,40,168 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி விகிதம் தொடர்ந்து 86 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.04 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 1.97 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 20 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், தொடர்ந்து 103 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE