நாட்டின் ஒரு சில பகுதிகளில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா கூறினார்.
மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் கோவிட் மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான உயர்நிலை ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவிட் மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான உயர்நிலை ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி. கே. பால் ஆகியோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்கள் (சுகாதாரம்), முதன்மைச் செயலாளர்கள் (சுகாதாரம்), நகராட்சி ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இதர உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஒரே நாளில் 2.5 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை செலுத்தி குறிப்பிடத்தகுந்த சாதனையைப் படைத்ததற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சரவை செயலாளர், சுகாதார பணியாளர்கள், தலைமை மருத்துவ அதிகாரிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாநில சுகாதார செயலாளர்களின் முயற்சிகளை வெகுவாகப் பாராட்டினார். தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், திட்டத்தின் வேகத்தை சீரமைக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதன் மூலம் திருப்தி அடையக்கூடாது என்று மாநிலங்களுக்கு நினைவூட்டிய அவர், கொவிட் சரியான நடத்தை விதிமுறையைக் கடுமையாகப் பின்பற்றுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
பெருந்தொற்றின் பல்வேறு அலைகளை சந்தித்த நாடுகளை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் ஒரு சில பகுதிகளில் நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டார். பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் அதனை எதிர்கொள்வதற்காக மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிக்குமாறும், அத்தியாவசிய மருந்துகளின் இருப்பை உறுதி செய்யுமாறும், வெகுவிரைவில் மனித சக்தியை மேம்படுத்துமாறும் மாநில நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
50 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago