குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்றார். அன்றுமுதல் அவரின் ஒவ்வொரு ஆண்டு பிறந்தநாளும் சேவைநாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த நாளில் நாடுமுழுவதும் மக்களுக்கு பல்வேறு இலவச சேவைகளை பாஜகவினர் வழங்கி வருகிறார்கள். இந்தமுறை இந்த சேவைகளை வழங்குவது 20 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
» பிரதமர் பெற்ற பரிசுகள், நினைவுப் பொருட்கள்: இன்று முதல் மின்னணு ஏலம்
» இந்தியாவில் ட்ரோன் தயாரிப்பு; 3 ஆண்டுகளில் ரூ 5,000 கோடி முதலீடு: மத்திய அரசு மெகா திட்டம்
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘பிறந்த நாள் வாழ்த்துக்கள், உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் பெற உங்களை நான் வாழ்த்துகிறேன், மேலும் ஆத்மார்த்தமான மனப்பான்மையுடன் தேசத்திற்கு தாங்கள் செய்து வரும் சேவை தொடர்ந்து செய்திட விரும்புகிறேன் "என்று கூறியுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘பிரதமர் மோடியின் தனித்துவமான தொலைநோக்கு, முன்மாதிரியான தலைமை, அர்ப்பணிப்பு, சேவை தேசத்தின் சகல வளர்ச்சிக்கும் வழிவகுத்துள்ளன. அவருக்கு நீண்டநாள், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago