பிரதமர் பெற்ற பரிசுகள், நினைவுப் பொருட்கள்: இன்று முதல் மின்னணு ஏலம்

By செய்திப்பிரிவு

பிரதமர் பெற்ற பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்கள் இன்று முதல் மின்னணு ஏலத்தில் விட கலாச்சாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்களை, மின்னணு ஏலத்தில் விடும் நிகழ்ச்சியை மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் நடத்துகிறது.

இந்த நினைவுப் பரிசுகளில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் அளித்த விளையாட்டு சாதனங்கள், அயோத்தி ராமர் கோயில், சர்தாம், ருத்ராக்ஷ் மாநாட்டு மையம் ஆகியவற்றின் மாதிரிகள், சிற்பங்கள், ஓவியங்கள், அங்கவஸ்திரங்கள் உட்பட பல பொருட்கள் உள்ளன.

இந்த மின்னணு-ஏலத்தில் பங்கேற்கும் நபர்கள் / அமைப்புகள் https://pmmementos.gov.in என்ற இணையதளம் மூலம் இன்று முதல் அக்டோபர் 7ம் தேதி வரை பங்கேற்க முடியும்.

இந்த மின்னணு ஏலம் மூலம் கிடைக்கும் பணம், கங்கை நதியை பாதுகாக்கும் மற்றும் புதுப்பிக்கும் நமாமி கங்கை திட்டத்துக்கு வழங்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

27 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்